அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ‘திடீர்’ சாவு
சேத்துப்பட்டு அருகே அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் திடீரென உயிரிழந்தார்.
சேத்துப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பல்லி கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 38), அரசு பஸ் டிரைவர். நேற்று இவர் போளூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பஸ்சை ஓட்டினார். பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
சேத்துப்பட்டு அருகே உள்ள மொடையூர் என்ற இடத்தின் அருகே காலை 8 மணியளவில் செல்லும் போது டிரைவர் அன்புராஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சுதாரித்து கொண்ட அவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார். பின்னர் அவர் பஸ்சின் இருக்கையில் சாய்ந்தபடி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
பஸ் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் பயணிகள் அவரை மீட்டு வேறு ஒரு பஸ் மூலம் சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அன்புராஜ் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story