வேளாண் உதவி இயக்குனரை நியமிக்கக் கோரி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
செய்யாறில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குனரை நியமிக் கக்கோரி விவசா யிகள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு,
செய்யாறு வேளாண் விரி வாக்க மையத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. செய்யாறு உதவி கலெக்டர் கிருபானந்தம் தலைமை தாங்கினார். அனக்காவூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சாந்தி முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் செய்யாறு வட்டார வேளாண் துறை அலுவலகத் திற்கு கடந்த 5 ஆண்டுகளாக உதவி இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை. அதனால் விவசாயிகளுக்கு கிடைக்க கூடிய அரசு நலத்திட்டங்கள் மற்றும் வேளாண் பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், விவசாயிகளின் விளை பொருட்களை விவசாயி களிடம் இருந்து கொள்முதல் செய்யவில்லை என குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக பலமுறை வட்ட அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விவசாயி களின் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. உடனடியாக செய்யாறு வட்டாரத்தில் வேளாண் உதவி இயக்குனரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கான உத்தரவாதத்தை அளிக்கும் வரை கூட்டத்தை நடத்தவிட மாட்டோம் என தரையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.
30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவி வேளாண் இயக்குனரை நியமிக்க மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உதவி கலெக்டர் கிருபானந்தம் அளித்த வாக்குறுதியின் பேரில் விவசாயிகள் போராட்டத் தினை கைவிட்டனர்.
இச்சம்பவத்தால் விவசாயி கள் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story