பலத்த மழை பாலாற்றில் கட்டப்பட்ட ஆந்திர தடுப்பணைகள் நிரம்பின தமிழகத்துக்கு நீர்வரத்து இல்லை


பலத்த மழை பாலாற்றில் கட்டப்பட்ட ஆந்திர தடுப்பணைகள் நிரம்பின தமிழகத்துக்கு நீர்வரத்து இல்லை
x
தினத்தந்தி 2 Aug 2017 4:30 AM IST (Updated: 2 Aug 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

பலத்த மழை காரணமாக பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு கட்டிய 22 தடுப்பணைகள் நிரம்பியது. ஆனால் தமிழகத்திற்கு நீர்வரத்து இல்லை.

வாணியம்பாடி,

வேலூர் மாவட்டத்திற்குள் நுழையும் பாலாற்று நீரை ஆந்திர அரசு 22 தடுப்பணை களை கட்டி தடுத்துள்ளது. இதனால் பாலாறு எப்போதும் வறண்டே காணப்படுகிறது.

மேலும் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தீர்வுகாண ஹந்திரி - நீவா திட்டக் கால்வாயை குப்பம் வரை நீடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதன்மூலம் கர்நாடகத்தில் இருந்து ஆந்திராவுக்குள் நுழையும் பாலாற்று நீர் ஆந்திர மாநிலத்தை விட்டு வெளி யேறாத வகையில் புதிதாக மேலும் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தியும் கட்டப்பட் டுள்ளது. குப்பத்தில் தொடங்கி வாணியம்பாடியை அடுத்த தமிழக எல்லையில் உள்ள புல்லூர் வரை 22 தடுப் பணைகளின் உயரம் 5 அடி இருந்தது. இதில் புல்லூர் தடுப்பணை 12 அடியாக உயர்த்தி கட்டப்பட்டது. மற்ற தடுப்பணைகள் 18 அடி வரை உயர்த்தப்பட்டது. தடுப்பணை உயர்த்தப்பட்டதால் வேலூர் மாவட்டத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வராமல் தடுக்கப் பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டிய 22 தடுப்பணைகளும் நிரம்பி வழிகிறது. தமிழக - ஆந்திர எல்லையில் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப் பணையும் நிரம்பி வழிகிறது.

ஆனால் தமிழக பாலாற்றில் தண்ணீர் வரவில்லை. புல்லூர் தடுப்பணையில் நிரம்பி வழியும் சிறிதளவு உபரி நீர் மட்டுமே தமிழக பாலாற்றில் வழிந்தோடுகிறது.

நீர்வரத்து இல்லாததால் பாலாற்றை நம்பி பாசனம் பெற்ற தமிழக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதற்கிடையே புல்லூர் தடுப் பணை நிரம்பி வழிவதால் அதில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கனக நாச்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் புல்லூர் தடுப்பணையில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. 

Related Tags :
Next Story