ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் 112-வது நாளாக போராட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் 112-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி முதல் 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 112-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. அதில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் போட்டனர். போராட்டத்தில் மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்கசண்முகசுந்தரம் கலந்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து, போராடும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களே தங்களை முதல்-அமைச்சராகவும், பிரதமராகவும் பதவி பிரமாணம் செய்துகொண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்வதுபோல சித்தரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story