மங்களூரு மதக்கலவரத்திற்கு பா.ஜனதாவினரே காரணம் மந்திரி ரமாநாத் ராய் பேட்டி


மங்களூரு மதக்கலவரத்திற்கு பா.ஜனதாவினரே காரணம் மந்திரி ரமாநாத் ராய் பேட்டி
x
தினத்தந்தி 2 Aug 2017 2:15 AM IST (Updated: 2 Aug 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு மதக்கலவரம் தொடர்பாக என்னையும், யு.டி.காதரையும் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், மதக்கலவரத்திற்கு பா.ஜனதாவினரே காரணம் என்றும் மந்திரி ரமாநாத் ராய் கூறினார்.

மங்களூரு,

மங்களூரு மதக்கலவரம் தொடர்பாக என்னையும், யு.டி.காதரையும் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், மதக்கலவரத்திற்கு பா.ஜனதாவினரே காரணம் என்றும் மந்திரி ரமாநாத் ராய் கூறினார்.

பா.ஜனதாவினரே காரணம்


தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா உப்பினங்கடியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கர்நாடக மாநில வனத்துறை மந்திரியும், அம்மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ரமாநாத் ராய் தலைமை தாங்கினார். கூட்டம் முடிந்ததும் மந்திரி ரமாநாத் ராய் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மதக்கலவரம் ஏற்பட நானும், மந்திரி யு.டி.காதரும் தான் காரணம் என்று பா.ஜனதாவினர் குற்றம்சாட்டினார்கள். ஆனால் மாவட்டத்தில் ஏற்பட்ட மதக்கலவரத்திற்கு பா.ஜனதாவினரே காரணம். அவர்கள் தான் சமூக வலைத்தளங்களில் தவறான பிரசாரம் செய்து மதக்கலவரத்தை தூண்டிவிட்டார்கள்.

பண்ட்வாலில் கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.பிரமுகரான சரத் மடிவாளாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மத்திய மந்திரி சதானந்தகவுடா, நளின்குமார் கட்டீல், ஷோபா ஆகியோர் ஏன்? கரவுபாடியில் கொலை செய்யப்பட்ட ஜலீல் மற்றும் ஆட்டோ டிரைவர் அஸ்ரப் கலாயிவின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவில்லை.

விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்

மங்களூருவில் ஏற்பட்ட மதக்கலவரத்தின் போது உயிருடன் இருப்பவர்களை கூட இறந்து போய் விட்டதாக கூறி ஷோபா, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை வழங்கி உள்ளார். கலவரத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரும் கைது செய்யப்படவில்லை.

சங்கபரிவார அமைப்பை சேர்ந்தவர்கள் தான் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் கலவரத்திற்கு யார் காரணம் என்று? இனியும் என்னையும், யு.டி.காதரையும் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story