சரக்கு, சேவை வரியை திரும்ப பெறக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்


சரக்கு, சேவை வரியை திரும்ப பெறக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:00 AM IST (Updated: 2 Aug 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு மற்றும் சேவை வரியை திரும்ப பெறக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி,

புதுச்சேரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட குழு சார்பில் நேற்று மாலை காந்தி வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தலைவர் முருகன், செயலாளர் சீனுவாசன், ராமசாமி, இளவரசி, மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு, 2018-ம் ஆண்டுக்கு பின்னர் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக ஒரு சமையில் எரிவாயு சிலிண்டரில் பட்டை நாமம் வரைந்து அதற்கு மாலை அணிவித்து வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம் குறித்து சி.ஐ.டி.யு. தலைவர் முருகன் கூறும்போது, மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவரையும் கடந்த 3 ஆண்டுகளாக மிகுந்த பதற்றத்துடன் வாழும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு சி.ஐ.டி.யு. சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தீப்பட்டி, கடலைமிட்டாய் போன்றவற்றிற்கு 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபான பொருட்களுக்கு வரி கிடையாது. எனவே சரக்கு மற்றும் சேவை வரியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Next Story