நல்லம்பள்ளி அருகே கனமழை: மின்னல் தாக்கி 22 ஆடுகள் செத்தன

நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நல்லம்பள்ளியை அடுத்த பரிகம் கிராமத்தில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜா (வயது 60) என்ற விவசாயிக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் மின்னல் தாக்கியது. இதில் அங்கிருந்த 30 ஆடுகளில் 22 ஆடுகள் செத்தன.
இவற்றில் 17 ஆடுகள் ராஜாவிற்கு சொந்தமானவை. 5 ஆடுகள் அவருடைய மகள் சுமதிக்கு சொந்தமானவை. செத்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். மின்னல் தாக்கி ஆடுகள் உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நல்லம்பள்ளி தாசில்தார் ரேவதி, வருவாய் ஆய்வாளர் மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த், கால்நடை உதவி டாக்டர் குந்தவை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மின்னல் தாக்கி இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் உறுதியளித்தனர். மின்னல் தாக்கி 22 ஆடுகள் இறந்தது தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story