‘வந்தே மாதரம்’ பாடவில்லை என்றால், தவறு இல்லை மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்


‘வந்தே மாதரம்’ பாடவில்லை என்றால், தவறு இல்லை மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:30 AM IST (Updated: 2 Aug 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

‘வந்தே மாதரம்’ பாடவில்லை என்றால், தவறு இல்லை என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

தானே,

‘வந்தே மாதரம்’ பாடவில்லை என்றால், தவறு இல்லை என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

வந்தே மாதரம்

தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

இதனை மராட்டியத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஒருவர் குரல் கொடுத்தார். இருப்பினும், ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவதற்கு சமாஜ்வாடி, மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

ராம்தாஸ் அத்வாலே பேட்டி

இந்த நிலையில், தானே மாவட்டம் கல்யாணில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே, இந்த விவகாரம் குறித்து நிருபர்களிடம் கருத்து கூறினார். அவர் பேசுகையில், “ஒவ்வொருவரும் ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும். ஆனாலும், அதனை ஒருவர் பாடவில்லை என்றால், தவறு இல்லை” என்றார்.

அத்துடன், சமூகத்தில் பகை உணர்வை உருவாக்கவே ‘வந்தே மாதரம்’ பிரச்சினையை ஒரு சிலர் வேண்டுமென்றே கிளறி விடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Next Story