உன்னத கவிஞன் ரவீந்திரநாத் தாகூர்
கீதாஞ்சலி தொகுப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தாகூருக்கு வழங்கப்பட்டதை நாம் அறிவோம்.
கீதாஞ்சலி தொகுப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தாகூருக்கு வழங்கப்பட்டதை நாம் அறிவோம். தேசிய கீதமான ஜன கன மன... பாடல் இந்த மாபெரும் கவிஞன் தாகூரின் பாடல் தான் என்பதும் அனைவரும் அறிந்ததே.
தாகூரின் மரணத்திற்குப் பின் 60 ஆண்டு காலமாக அவருடைய படைப்புகளுக்கான பதிப்புரிமை விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திடமே இருந்தது. 2001-ல் தான் பதிப்புரிமை நீக்கப்பட்டது. இப்போது தாகூர் பாடல்களின் மொழி பெயர்ப்புகளும், அவற்றுக் கான புதிய விளக்கங்களும் வெளிவருகின்றன.
தாகூர் ஒரு சர்வதேச மனிதர். உலகெங்கும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். தாகூர் ஒப்பில்லாத கவிஞராகவும், ஓவியராகவும் இருந்தாலும், அவருடைய இசையே நாட்டை அதிசயிக்க வைத்தது.
வாழ்க்கை வரலாற்று நூல், அவரது கவிதை, நாவல்கள் மற்றும் ஓவியங் கள் யாவற்றிலும் அவரது இசை இழையோடுகிறது. தாகூர் 2000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவருடைய பல்துறை திறன், இசையின் சக்தியை அவரது பல வகை பாடல்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டு பழமையான வங்காள இலக்கியத்தின் நாயகர்களில் ஒருவர். இந்தியா, வங்காளதேசம் என இரு நாடுகளிலும் மிக பரந்த அளவில் புகழ் பெற்றவர். அவருடைய கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை மிகவும் பரந்த அளவில் உலகம் முழுவதும் வாசிக்கப்படுகின்றன. பாடல்களுக்கு அவர் அமைத்த இசை கிழக்கிந்தியாவை தாண்டி, தெற்காசியாவிலும் எதிரொலித்து, உலகம் முழுவதும் மணம் பரப்புகின்றன.
இரண்டு தேசிய கீதங்களை இயற்றிய பெருமை மிக்க உன்னத கவிஞன். நோபல் பரிசு பெற்ற தாகூர், இந்தியாவை, உலக இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தவர். கருணையே இவரது சமயம்.

Related Tags :
Next Story