4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவர் கைது


4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முதியவர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2017 2:45 AM IST (Updated: 2 Aug 2017 7:49 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 60). இவர் கடந்த 30–ந் தேதி மதியம் அதேபகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.

காட்பாடி,

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 60). இவர் கடந்த 30–ந் தேதி மதியம் அதேபகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கதறினாள். அதற்கு மோகன்தாஸ், அந்த சிறுமியிடம் இது குறித்து வெளியே சொன்னால் உனது அம்மாவையும், அப்பாவையும் தொலைத்து விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவங்களை அவரது பெற்றோரிடம் கூறினாள்.

அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாஸை கைது செய்தனர்.


Next Story