டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்


டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 3 Aug 2017 3:30 AM IST (Updated: 2 Aug 2017 8:26 PM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு ஒன்றியம் கொம்மணந்தல் வட்டார சுகாதார மருத்துவமனை சார்பில், சேத்துப்பட்டு நகரில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு ஒன்றியம் கொம்மணந்தல் வட்டார சுகாதார மருத்துவமனை சார்பில், சேத்துப்பட்டு நகரில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மீரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் தூய லூர்து அன்னை ஆலயத்தின் முன்பு தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

இதில் டாக்டர்கள் ராஜேஸ்குமார், சுந்தர், மதிமணவாளன், அருண், சூலைமான் மற்றும் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், ஆனந்தகுமார், அந்தோணிராஜ், செவிலியர்கள், மாணவ– மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் காமராஜர் பஸ் நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.



Next Story