வந்தவாசியில் 724 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் கடன் உதவி
வந்தவாசியில் 724 பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் கடன் உதவி வழங்கும் விழா நடந்தது.
வந்தவாசி,
வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 47 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 724 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரம் கடன் உதவி வழங்கும் விழா சங்க வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு சங்க தலைவர் எஸ்.தர்மதுரை தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி.கே.பி.மணி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.பாஸ்கர்ரெட்டியார், கல்வி வளர்ச்சிக்குழு தலைவர் ஏ.விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கினார். இதில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தூசி கே.மோகன், இணை பதிவாளர் வே.நந்தகுமார், துணை பதிவாளர் இ.சரவணன், ஒன்றிய செயலாளர் ஆர்.அர்ச்சுனன், நகர பேரவை செயலாளர் வி.மேகநாதன், சங்க செயலாளர் ஏ.சம்பத்ராவ், உதவி செயலாளர் ஏ.நாராயணன், சங்க உதவி தலைவர் உஷா ஏழுமலை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.