அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் வெங்கடேஷ் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
அம்மா திட்ட முகாம்அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று, அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் தலா ஒரு கிராமத்தில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
கிராமங்கள் விவரம்இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மீளவிட்டான் பகுதி–2 கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆழிகுடியிலும், திருச்செந்தூர் தாலுகா நாசரேத்திலும், சாத்தான்குளம் தாலுகா கொம்பன்குளம் கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகா வடக்குபட்டியிலும், விளாத்திகுளம் தாலுகா வேம்பாரிலும், எட்டயபுரம் தாலுகா சோழபுரத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகா புதூர்பாண்டியாபுரத்திலும், கயத்தாறு தாலுகா கே.குமாரபுரத்திலும் முகாம் நடக்கிறது.
உடனடி தீர்வுஇந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.