ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2017 4:00 AM IST (Updated: 3 Aug 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஜமுக்காள நெசவுத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

பவானி,

ஜமுக்காளத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கைத்தறி ஜமுக்காள நெசவுத்தொழில் அனைத்து சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பவானி அந்தியூர் பிரிவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பவானி வட்டார நெசவாளர் சங்க பொறுப்பாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சித்தையன், பொருளாளர் ரமேஷ் பாபு, கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கைத்தறி ஜமுக்காள நெசவுத்தொழிலாளர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், ஜமுக்காள வியாபாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story