‘மத்திய அரசின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்படமாட்டோம்’ முதல்–மந்திரி சித்தராமையா அறிக்கை
மத்திய அரசின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
மத்திய அரசின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
வருமான வரி சோதனை குறித்து முதல்–மந்திரி சித்தராமையா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நாங்கள் பயப்படமாட்டோம்கர்நாடக மாநில மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரை குறிவைத்து இந்த வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில் மத்திய அரசுக்கு தொடர்பு இருப்பது தெளிவாக தெரிகிறது. தனது அரசியல் சதிகளுக்கு வருமான வரித்துறையை மத்திய அரசு பயன்படுத்திக்கொள்வது நல்லதல்ல. மத்திய அரசின் இத்தகை மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்படமாட்டோம்.
வருமான வரி சோதனையின்போது பாதுகாப்பு பணிக்கு உள்ளூர் போலீசாரை தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி துணை ராணுவப் படை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது ஆகும். விதிமுறைகளின்படி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தட்டும். இதன் மூலம் மக்களுக்கு உண்மையை தெரிவிக்கட்டும்.
மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் இத்தகைய வருமான வரி சோதனைகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தனக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை அடக்கும் விதத்தில் அரசியல் பழிவாங்க இந்த வருமான வரித்துறையை பா.ஜனதா பயன்படுத்துகிறது. இது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமின்றி ஜனநாயக விரோத செயல்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.