தீரன்சின்னமலை நினைவுநாளையொட்டி ஓடாநிலை வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு


தீரன்சின்னமலை நினைவுநாளையொட்டி ஓடாநிலை வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 3 Aug 2017 4:45 AM IST (Updated: 3 Aug 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

தீரன்சின்னமலை நினைவுநாளையொட்டி ஓடாநிலை வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு தலைமைக்கழக நிர்வாகி கே.சி.பழனிச்சாமி அறிக்கை

காங்கேயம்,

வெள்ளையர்களை எதிர்த்து போராடி உயிர்நீத்த தீரன்சின்னமலையின் நினைவு தினம் நாளை (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் அனுசரிக்கப்படுகிறது. இதில் முன்னாள் முதல்–அமைச்சரும் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி நிர்வாகியுமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு தீரன்சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

இதையொட்டி கோவையில் இருந்து கார் மூலம் ஓடாநிலைக்கு வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே முன்னாள் எம்.பி.யும், தலைமைக்கழக நிர்வாகியுமான எனது (கே.சி.பழனிச்சாமி) தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் துரைராமசாமி, பி.சி.ராமசாமி, திருப்பூர் எம்.பி.சத்தியபாமா, முன்னாள் எம்.பி.க்கள் பி.ஜி.நாராயணன்,வி.கே.சின்னசாமி, என்.ஆர்.கோவிந்தராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.என்.நடராஜ், பழனிச்சாமி, பரமசிவம், செல்விமுருகேசன், பூந்துறைபாலு, ஆர்.என்.கிட்டுசாமி, மாரப்பன், மகாலிங்கம், ரமணீதரன் மற்றும் திருப்பூர், ஈரோடு மாவட்ட முன்னாள் நகராட்சித்தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.


Next Story