டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புதுவை விவசாயிகளுக்கு முதல்–அமைச்சர், அமைச்சர்கள் ஆதரவு


டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புதுவை விவசாயிகளுக்கு முதல்–அமைச்சர், அமைச்சர்கள் ஆதரவு
x
தினத்தந்தி 3 Aug 2017 4:30 AM IST (Updated: 3 Aug 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

புதுச்சேரி,

புதுவை விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் ரூ.20 கோடியை தள்ளுபடி செய்ய புதுவை அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான கோப்பு கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோப்புக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் இது தொடர்பாக பல முறை வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய முட்டுக்கட்டை போடும் கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும், அவரை புதுவையில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுவை மாநில விவசாயிகள் கூட்டமைப்பினர் அதன் தலைவர் செந்தில்குமார் தலைமையில் கடந்த 27–ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகளின் நலனுக்காக இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் உறுதி அளித்தனர். மேலும் மத்திய வேளாண்துறை மந்திரியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.


Next Story