ஓமலூரில் மர்ம காய்ச்சலுக்கு 8 மாத ஆண் குழந்தை பலி


ஓமலூரில் மர்ம காய்ச்சலுக்கு 8 மாத ஆண் குழந்தை பலி
x
தினத்தந்தி 3 Aug 2017 4:15 AM IST (Updated: 3 Aug 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூரில் மர்ம காய்ச்சலுக்கு 8 மாத ஆண் குழந்தை பலியானது.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்துல் அகமது என்கிற சேட்டு. இவர் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு டீ கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அனீஸ் பாத்திமா. இவர்களுக்கு அப்ரீன் பாத்திமா (வயது 11) என்ற மகளும், முகமது அக்கீஸ் என்ற 6 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குழந்தை முகமது அக்கீஸ் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தான். இதனையடுத்து ஓமலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபின் மேல் சிகிச்சைகாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நேற்று மதியம் குழந்தை முகமது அக்கீஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

இதேபோல் கடந்த ஒரு வாரத்தில் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் மர்ம காய்ச்சலால் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.

நேற்று ஆர்.சி.செட்டிபட்டி பகுதியில் 6 பேருக்கு மேல் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதைதொடர்ந்து அங்கு பாகல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story