2 பெண்களிடம் நகை பறிப்பு


2 பெண்களிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2017 4:15 AM IST (Updated: 3 Aug 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் 2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் இந்திரா நகர் கந்தசாமி சாலையில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 30). இவர் தனது வீட்டின் முன்புள்ள சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென ராஜலட்சுமி அணிந்து இருந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக சென்று விட்டனர்.

மற்றொரு பெண்ணிடம்

மேலும் அதே பகுதியில் உள்ள நீலகண்டபுரம் மீனாட்சி தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (37). இவரது மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பார்த்தசாரதியின் மனைவி அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக சென்று விட்டனர்.

இது குறித்து செந்தில்குமார் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Next Story