மும்பையில் மீண்டும் ஏ.சி. பஸ் சேவை 15–ந் தேதி முதல் அறிமுகம்
மும்பையில் மீண்டும் ஏ.சி. பஸ் சேவை வருகிற 15–ந் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
மும்பை,
மும்பையில் மீண்டும் ஏ.சி. பஸ் சேவை வருகிற 15–ந் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஏ.சி. பஸ் சேவைமும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பெஸ்ட் குழுமம் பஸ் சேவைகளை இயக்கி வருகிறது. தனக்கு ஏற்பட்டு வரும் நஷ்டம் காரணமாக பெஸ்ட் குழுமம் மும்பையில் இயக்கி வந்த ஏ.சி. பஸ் சேவைகளை முற்றிலுமாக நிறுத்தியது.
இதன் காரணமாக ஏ.சி. பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகினார்கள். இந்த நிலையில், மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) ஒருங்கிணைப்புடன் பெஸ்ட் குழுமம் மீண்டும் ஏ.சி. பஸ் சேவைகளை இயக்க முடிவு செய்திருக்கிறது.
சுதந்திர தினத்தன்று...ஹைபிரிட் எனப்படும் அதிநவீன ஏ.சி. பஸ்களை எம்.எம்.ஆர்.டி.ஏ., பெஸ்ட் குழுமத்திற்கு வழங்குகிறது. இந்த பஸ் சேவைகள் வருகிற 15–ந் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பெஸ்ட் குழும பொது மேலாளர் சுந்திரகுமார் பாக்டே கூறினார்.
மேலும் இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ முதற்கட்டமாக 5 ஏ.சி. பஸ்கள் முக்கிய இடங்களில் இருந்து பாந்திரா – குர்லா காம்ப்ளக்சிற்கு இயக்கப்படும்.
படிப்படியாக மேலும் ஏ.சி. பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். முதற்கட்டமாக இயக்கப்படும் ஏ.சி. பஸ்களில் ரூ.15 முதல் ரூ.25 வரை டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும்’’ என்றார்.