10–ம் வகுப்போடு நின்றுவிடாமல் மாணவர்கள் உயர்கல்வியை தொடர வேண்டும்


10–ம் வகுப்போடு நின்றுவிடாமல் மாணவர்கள் உயர்கல்வியை தொடர வேண்டும்
x
தினத்தந்தி 4 Aug 2017 4:00 AM IST (Updated: 3 Aug 2017 8:29 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் 10–ம் வகுப்போடு நின்றுவிடாமல் உயர்கல்வியை தொடரவேண்டும் என்று தரம் உயர்த்தப்பட்ட பள்ளி தொடக்கவிழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசினார்.

ஆரணி,

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிழா நடைபெற்றது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார், முன்னாள் கவுன்சிலர் சேவூர் சம்பத், மாநில ஜவுளித்துறை இயக்குனர் தீபாசம்பத், மாநில டான்சி இயக்குனர் ஏ.கே.குமரவேல், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மேகலா வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு தரம் உயர்த்தப்பட்ட பள்ளியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசினார். அப்போது இங்கு படிக்கும் அனைவரும் 10–ம் வகுப்போடு நின்றுவிடாமல் தொடர்ந்து 12–ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியை தொடரவேண்டும் என்றார்.

அதேபோன்று சங்கீதவாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.

அதைத்தொடர்ந்து ஆரணி நகராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டத்தின்கீழ் குடிசைமாற்றுவாரியம் மூலம்தேர்வு செய்யப்பட்ட 160 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் வீடுகட்டும் பணிக்கான உத்தரவுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் கலந்துகொண்டு வீடுகட்டுவதற்கான உத்தரவுகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராமசாமி தலைமை தாங்கினார். குடிசைமாற்றுவாரிய உதவி பொறியாளர் மணிவிஸ்வநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் கருணாகரன், ரமணிநீலமேகம், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கே.சங்கர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் செய்திமக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.


Next Story