அப்துல்கலாம் சாதனை விளக்க ரதம் நெல்லை வந்தது மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்
அப்துல்கலாம் சாதனை விளக்க ரதம் நேற்று நெல்லை வந்தது. இந்த ரதத்தை மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
நெல்லை,
அப்துல்கலாம் சாதனை விளக்க ரதம் நேற்று நெல்லை வந்தது. இந்த ரதத்தை மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
சாதனை விளக்க ரதம்மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2–ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு, சாதனை பட்டியல், புகைப்படங்கள் அடங்கிய “சந்தேஷ் வாஹினி“ என்ற ரதம் வடிவமைக்கப்பட்டது. அந்த ரதத்தில் அப்துல்கலாமின் சிறுவயது புகைப்படங்கள், படித்த பள்ளிக்கூடம், விண்வெளி ஆராய்ச்சியில் அவர் செய்த சாதனைகள், விருதுகள் மற்றும் அரிய வகை புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.
ராமேஸ்வரத்தில் நடந்த அப்துல்கலாம் நினைவுநாள் நிகழ்ச்சியில் இந்த ரதத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரதம் 16 மாநிலங்கள் வழியாக 81 நாட்கள் பயணம் செய்து அப்துல்கலாம் பிறந்தநாளான வருகிற அக்டோபர் மாதம் 15–ந்தேதி டெல்லியை சென்றடைகிறது.
நெல்லை வந்ததுஇந்த அப்துல்கலாம் சாதனை விளக்க ரதம் நேற்று காலை நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் என்ஜினீயரிங் கல்லூரி வந்தது. இந்த ரதத்தை பாளையங்கோட்டை சின்மயா வித்யாலயா, அப்துல் ரஹீம் பள்ளி, புஷ்பலதா மெட்ரிகுலேசன் பள்ளி, சாரதா பெண்கள் கல்லூரி உள்பட பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். பொதுமக்களும் ஆர்வமாக பார்த்தனர். மாலையில் சங்கர்நகர், வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக அப்துல்கலாம் சாதளை விளக்க ரதம் நிறுத்தப்பட்டது.