தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு புதிய தொழில்கள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு புதிய தொழில்களை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு புதிய தொழில்களை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாதூத்துக்குடி மாவட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் மகளிர் திட்டம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியனில் உள்ள 5 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு, அகரம் பாதசாரிகள் பூங்காவில் உணவகம் உள்ளிட்ட தொழில்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா அகரம் பாதசாரிகள் பூங்காவில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி மகளிர் குழுக்களுக்கான புதிய தொழில்களை தொடங்கி வைத்தார். இந்த விழாவுக்கு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி முன்னிலை வகித்தார். விழாவில் நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் சுழல்நிதி வழங்கப்பட்டது.
வங்கி கடன்விழாவில் கலெக்டர் பேசும் போது, ‘அனைத்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய சுயதொழில்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த உணவகத்தை தன்னார்வத்துடன் வெற்றிகரமாக நடத்த வேண்டும். மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் உதவிகள் முழுமையாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்விழாவில் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் ரிச்சர்டு வில்சன், சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், முத்துக்குமார் மற்றும் அலுவலர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.