கீரப்பாக்கத்தில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க ரூ.21 லட்சம் செலவில் உலர்களம்


கீரப்பாக்கத்தில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க ரூ.21 லட்சம் செலவில் உலர்களம்
x
தினத்தந்தி 4 Aug 2017 4:00 AM IST (Updated: 4 Aug 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க மாவட்ட கலெக்டர் கீரப்பாக்கத்தில் சுமார் 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்துள்ளார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நந்திவரம்–கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திரிசூலம், மாடம்பாக்கம், மாங்காடு உள்பட 8 பேரூராட்சிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் 90 டன் குப்பைகளை தரம் பிரித்து அதில் இருந்து உரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:– 

8 பேரூராட்சிகளில் இருந்து தரம் பிரித்து கொண்டு வரப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க மாவட்ட கலெக்டர். கீரப்பாக்கத்தில் சுமார் 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி தந்துள்ளார். இந்த இடத்தில் ரூ.21 லட்சம் செலவில் உலர்களம் அமைக்கப்படுகிறது. இந்த உலர்களத்தில் 8 பேரூராட்சிகளில் இருந்து தரம் பிரித்து கொண்டு வரப்படும் குப்பைகளை கொட்டி உரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலர்களம் அமைக்கும் பணி தொடங்குவதற்காக இந்த மாதம் டெண்டர் விடப்படுகிறது. இதன் பின்னர் உலர்களம் அமைக்கும் பணி விரைவாக முடிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி விரைவில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story