கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தீவிர கண்காணிப்பு


கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2017 4:15 AM IST (Updated: 4 Aug 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

மணமேல்குடி பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தீவிர கண்காணிப்பு

மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த ஆர்.புதுப்பட்டினம் கடற்கரையில் இலங்கை பதிவெண் கொண்ட மர்ம படகு கடந்த 2 நாட்களுக்கு முன் கரை ஒதுங்கியது. இந்த படகில் மர்ம நபர்கள் நாசவேலை செய்ய வந்தார்களா? அல்லது கடத்தல் நடைபெற்றதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம் மும்பாலை, கோட்டைப்பட்டினம், அரசங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி வாகனத்தை முழுசோதனையிட்டனர். பிறகு வாகனத்தில் இருந்தவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் மற்றும் வாகனத்தின் ஆவணங்களை சரி பார்த்த பிறகே வாகனத்தை செல்ல அனுமதித்தனர். 

Related Tags :
Next Story