ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். அவர்கள் சாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
பென்னாகரம்,
தமிழகத்தில் காவிரி ஆற்றின் நுழைவாயிலாக விளங்கும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவின்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திரள்வது வழக்கம். இந்த ஆண்டின் ஆடிப்பெருக்கு நாளான நேற்று தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் திரண்டனர்.
ஆடிப்பெருக்கையொட்டி புதுமண தம்பதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றங்கரையின் பல்வேறு இடங்களில் புனித நீராடினார்கள். பின்னர் தேசநாதேஸ்வரர்-காவேரியம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். மேலும் விநாயகர் மற்றும் நாகர் கோவில்களில் திரண்ட பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தினார்கள். கிராமப்புறங்களில் இருந்து சாமி சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து காவிரி ஆற்றங்கரையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
ஒகேனக்கல்லில் திரண்ட சுற்றுலா பயணிகள் பலர் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் பரிசல்களில் சென்று ஒகேனக்கல் சுற்றுலா தலத்தின் இயற்கை எழிலை கண்டு களித்தனர். இதன் காரணமாக பரிசல்துறைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதேபோல் ஒகேனக்கல்லில் உள்ள மீன்பண்ணை, முதலைப்பண்ணை, அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். ஒகேனக்கல்லில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டதால் மீன் விற்பனை சூடுபிடித்தது. ஒகேனக்கல்லில் உள்ள கடைகளில் மீன்வறுவல், மீன்குழம்பு ஆகியவற்றுடன் கூடிய உணவு விற்பனை படுஜோராக நடந்தது.
விழாவையொட்டி ஒகேனக்கல்லில் நூற்றுக்கணக்கான போலீசார், ஊர்க்காவல் மற்றும் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதிலும் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

Related Tags :
Next Story