ஓய்வு பெற்ற அதிகாரியின் வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு

மதுரை,
மதுரை மகாத்மா காந்திநகர், சரஸ்வதி தெருவைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. அமலாக்கத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். நேற்று காலை அவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் 1 பவுன் நகை திருடு போனதாகவும், மற்ற நகைகள் பத்திரமாக உள்ளதாகவும் பொன்னுச்சாமியின் உறவினர் தெரிவித்தார்.
இதே போல் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் கதவும் உடைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது, அந்த வீட்டில் ஒரு ஜோடி தங்க கம்மல் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவங்கள் குறித்து கூடல்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story