ஆடிப்பெருக்கையொட்டி குலதெய்வ கோவிலில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் சாமிதரிசனம்


ஆடிப்பெருக்கையொட்டி குலதெய்வ கோவிலில் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் சாமிதரிசனம்
x
தினத்தந்தி 4 Aug 2017 4:45 AM IST (Updated: 4 Aug 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கையொட்டி குலதெய்வ கோவிலில் நடிகர் தனுஷ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

கண்டமனூர்,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே முத்துரெங்காபுரம் கிராமத்தில் நடிகர் தனுஷின் குல தெய்வமான கஸ்தூரி அங்கம்மாள் கோவில் உள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த கோவிலுக்கு தனுஷ் வந்தார்.

அவருடைய மனைவி ஐஸ்வர்யா, தந்தை கஸ்தூரிராஜா, தாயார் விஜயலட்சுமி ஆகியோரும் அவருடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தீபாராதனை காட்டப்பட்டு தேங்காய், பழம் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் தனுஷ் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது.

தனுஷ் சார்பில், கோவில் வளாகத்தில் 3 கிடாய்கள் பலியிடப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்களுடன் தனுஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உணவு சாப்பிட்டனர்.

பின்னர் அவர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கேரவன் பஸ்சில் உட்கார்ந்தனர். நெருங்கிய உறவினர்களும் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். சுமார் 1½ மணி நேரம் தனுஷ் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேசி கொண்டிருந்தனர். அதன்பின்னர் தங்களது கார்களில் ஏறி தேனி நோக்கி தனுஷ் குடும்பத்தினர் சென்றனர். 

Related Tags :
Next Story