சாந்திவிலியில் கட்டிடத்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்
சாந்திவிலியில் கட்டிடத்தில் இருந்து குதித்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
சாந்திவிலியில் கட்டிடத்தில் இருந்து குதித்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண்உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் வர்ஷா யாதவ் (வயது21). இவரது அண்ணன் மும்பையில் மருந்து கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் சாந்திவிலியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் வர்ஷா யாதவும் மும்பை வந்தார். அவர் தனது அண்ணன் உடன் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணியளவில் திடீரென வர்ஷா யாதவ் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.
தற்கொலைஇதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் வர்ஷா யாதவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். என்ன காரணத்திற்காக வர்ஷா கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது அண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.