இலங்கை கடற்படை தொல்லை இல்லாமல் மீன்பிடித்து கரை திரும்பிய மீனவர்கள்
மன்னார் வளைகுடா கடலில் இலங்கை கடற்படை தொல்லை இல்லாமல் மீனவர்கள் மீன் பிடித்து கரை திரும்பினர்.
ராமேசுவரம்,
தமிழக கடல் பகுதியான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்திய கடல் எல்லையை தாண்டி தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடிக்க வந்தால் படகை பறிமுதல் செய்வோம் எனவும், படகு மற்றும் மீனவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது காரணமாக கூறப்படுகிறது.
இலங்கை அரசின் இந்த அறிவிப்பால் ராமேசுவரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட படகுகளில் 500 படகுகள் மட்டுமே பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்று வருகின்றன. மேலும் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் 5-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களை நிறுத்தியுள்ளதுடன் கச்சத்தீவிலேயே நிரந்தரமாக கடற்படை முகாம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்கவே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ராமேசுவரம் மற்றும் மண்டபம் வடக்கு பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்து தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு இடம் பெயர்ந்து மீன் பிடிக்க சென்றுவருகின்றனர். இதில் பாம்பனில் மட்டும் 90 விசைப் படகுகள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக ராமேசுவரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாம்பன் தெற்குவாடி கடல்பகுதியில் நிறுத்தப்பட்டு மீன்பிடிக்க சென்று வருகின்றன. மண்டபம் தென் கடல் பகுதியில் கூடுதலாக 100 படகுகளும் தெற்கு துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு தென் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்று வருகின்றன.
பாம்பனில் இருந்து தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று வரும் பாம்பன்,ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் இலங்கை கடற்படை தொல்லை இல்லாமல் நிம்மதியாக மீன்பிடித்து வருகின்றனர். இந்த பகுதியில் இந்திய கடல் எல்லை பரந்து விரிந்து உள்ளதால் மீனவர்கள் மீன் பிடித்து நிம்மதியாக கரை திரும்புகின்றனர். இதனால் தற்போது பாம்பன்தெற்குவாடி கடற்கரை மீன் பிடி இறங்குதளம் களைகட்டி வருகிறது. மேலும் இந்த மீன்பிடி இறங்கு தளம் மிகவும் சிறியதாக உள்ளதால் இட நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இது பற்றி பாம்பன் விசைப்படகு மீனவர் பேட்ரிக் கூறியதாவது:-
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை செயல்படுத்த தொடங்கி உள்ளது. ஆனால் ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தின் கீழ் மானியத்துடன் மத்திய-மாநில அரசுகள் படகுகள் வழங்கவுள்ளன. மானியத்துடன் வழங்கும் ஆழ்கடல் மீன் பிடி படகுகள் வாங்குவதில் இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாமல் அரசு உண்மையான மீனவர்களுக்கு வழங்க வேண்டும். படகு கள் மட்டும் மானிய விலையில் அரசு வழங்கினால் போதாது.
ஆழ் கடல் மீன் பிடி தொழிலில் சிறந்து விளங்கும் தூத்துக்குடி தரவைக்குளம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் உள்ள ஆழ் கடல் மீனவர்கள் மூலம் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை படகு மூலம் ஆழ்கடல் மீன் பிடி தொழில் செய்யும் இடத்திற்கே நேரடியாக அழைத்து சென்று சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும். ராமேசுவரம் முதல் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, சாயல்குடி மூக்கையூர் வரை ஆழ்கடல் மீன் பிடி படகுகள் நிறுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் பெரிய தூண்டில் வளைவு போன்ற துறைமுகத்தை மத்திய-மாநில அரசுகள் கட்ட வேண்டும். இவை அனைத்தையும் மத்திய-மாநில அரசுகள் செய்து தரும் பட்சத்தில் 100 சதவீதம் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன் பிடி தொழில் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story