அழகன்குளம் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 2000 ரூபாய் கள்ளநோட்டு கொடுத்து மோசடி


அழகன்குளம் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் 2000 ரூபாய் கள்ளநோட்டு கொடுத்து மோசடி
x
தினத்தந்தி 5 Aug 2017 3:45 AM IST (Updated: 4 Aug 2017 11:40 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் அழகன்குளம்-பனைக்குளம் இடையே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது.

பனைக்குளம்,

இந்த விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் விற்பனையான பணத்தை ஊழியர் ஒருவர் அழகன்குளத்தில் உள்ள ஒரு வங்கியில் செலுத்த சென்றார். அப்போது அதில் ஒரு 2000 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு என கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ரூபாயை வங்கி அதிகாரிகள் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் திருப்பி கொடுத்தனர். இதுகுறித்து அவர் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் வக்கீல் அசோகனிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வக்கீல் அசோகன் கூறும்போது, நேற்று முன்தினம் பெட்ரோல் போடுவதற்காக வந்த மர்ம நபர் 2000 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த ரூபாயை பெற்றுக்கொண்ட ஊழியருக்கு லேசாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வேறு சில்லரை கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த நபர் எங்கள் ஊழியரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த நிலையில் வங்கியில் அந்த நோட்டு கள்ள நோட்டு என்பது கண்டறியப்பட்டுஉள்ளது. இதுகுறித்துஉச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து கள்ள நோட்டை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட நபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.


Next Story