கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் சங்கிலிகள் பறிப்பு


கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் சங்கிலிகள் பறிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2017 2:00 AM IST (Updated: 4 Aug 2017 11:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே, கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் எடையுள்ள 2 சங்கிலிகளை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே, கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் எடையுள்ள 2 சங்கிலிகளை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

வியாபாரி

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யன்கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்துரை. வியாபாரி. இவர் பழையகாயலில் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி அளந்தம்மாள் (வயது 39). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலையில் வேல்துரை தனது மனைவி மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி பனிமய மாதா கோவிலுக்கு சென்றார். பின்னர் இரவு 2 மகன்களை மட்டும் பஸ்சில் அனுப்பி விட்டு, மனைவி மற்றும் மற்ற 2 மகன்களுடன் வேல்துரை வீட்டுக்கு புறப்பட்டார்.

அவர்கள், மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியை அடுத்த உப்பாற்று ஓடையை தாண்டி சென்று கொண்டிருந்தனர். அப்போது

8 பவுன் சங்கிலிகள்

அவர்களில் ஒருவன், கண் இமைக்கும் நேரத்தில் அளந்தம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலி மற்றும் 3 பவுன் சங்கிலியை பறித்துள்ளான். பின்னர், அந்த 2 மர்ம வாலிபர்கள் 8 பவுன் சங்கிலிகளுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகைகளை வழிப்பறி செய்த 2 மர்ம வாலிபர்களை தேடிவருகின்றனர்.

இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story