ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பூங்கோதை எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பூங்கோதை எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல் கூறினார்.
நெல்லை,
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பூங்கோதை எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல் கூறினார்.
டெங்கு காய்ச்சல் அறிகுறிபாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வார்டில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 12 வயதுக்கு உட்பட்ட 35 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அந்த வார்டில் சிசிச்சை பெற்று வரும் குழந்தைகளை பூங்கோதை எம்.எல்.ஏ. நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
2 பேர் உயிரிழந்தனர்ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்படும். அரசு தக்க நடவடிக்கை எடுத்தால், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதை செய்ய அரசு தவறி விட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்படுகிறது.
குறிப்பாக ஆலங்குளம், அம்பை, கடையநல்லூர், கடையம், சங்கரன்கோவில் ஆகிய ஊர்களில் அதிக அளவு டெங்கு காய்ச்சலால் பாதிப்பு இருக்கிறது. ஆலங்குளத்தில் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டு இறந்துள்ளனர். தட்ட அணுக்கள் குறைவால் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த அணுக்களை கண்டறியும் கருவி பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் இல்லை. எனவே இந்த கருவிகளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் வாங்கி கொடுக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பற்றி பொதுமக்களிடையை விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் 350 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பூங்கோதை எம்.எல்.ஏ. கூறினார்.