‘காதலித்து ஏமாற்றியதாக வாலிபர் மீது புகார்’ போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த திருநங்கை


‘காதலித்து ஏமாற்றியதாக வாலிபர் மீது புகார்’ போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த திருநங்கை
x
தினத்தந்தி 5 Aug 2017 2:00 AM IST (Updated: 5 Aug 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

மேலப்பாளையத்தை சேர்ந்த ஆதிரா என்ற திருநங்கை நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், “மேலப்பாளையத்தை சேர்ந்த இலியாஸ் (வயது 30) என்பவர் என்னுடன் நட்பு ரீதியாக பழகி வந்தார். நாளடைவில் எங்கள் நட்பு காதலாக மாறியது. அவர் என்ன

நெல்லை,

மேலப்பாளையத்தை சேர்ந்த ஆதிரா என்ற திருநங்கை நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில், “மேலப்பாளையத்தை சேர்ந்த இலியாஸ் (வயது 30) என்பவர் என்னுடன் நட்பு ரீதியாக பழகி வந்தார். நாளடைவில் எங்கள் நட்பு காதலாக மாறியது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகினார்.

தற்போது என்னை திருமணம் கொள்ள மறுத்து வருகிறார். மேலும் அவருடைய உறவினர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது. ஆதிரா தான் வந்த ஆட்டோவில் இலியாசையும் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story