திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு ஒடிசா மாநிலம் அலிகாடா பகுதியை சேர்ந்த பிரகாஷ்பரிடா (வயது 20) என்பவர் கடந்த 4 மாதங்களாக
எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவு
அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மப்பேடு இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story