குன்னூர் அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் பீதி
குன்னூர் அருகே குடியிருப்புக்கு அருகில் கருஞ் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே அட்டடி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். குடியிருப்பு பகுதியையொட்டி தனியார் தேயிலை தோட்டங்களும், வனப்பகுதிகளும் உள்ளன. இங்கு காட்டெருமைகள், வரையாடுகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் காணப்படுகின்றன. அவ்வப்போது சிறுத்தைப்புலியின் நடமாட்டமும் இருந்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய கருஞ்சிறுத்தை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு அருகில் வந்தது.
கடந்த 30-ந் தேதி மாலை குடியிருப்பு பகுதிக்கு அருகில் வந்த கருஞ்சிறுத்தை நாய் ஒன்றை கவ்வி சென்றுள்ளது. பின்னர் கடந்த 1-ந் தேதியும் கருஞ்சிறுத்தை வந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனிடையே நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டம் அருகே ஒரு பாறையில் கருஞ்சிறுத்தை அமர்ந்திருந்தது. இதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்தனர். 30 நிமிடங்கள் அந்த பாறையில் அமர்ந்திருந்த கருஞ் சிறுத்தை அருகில் இருந்த புதரில் பதுங்கி கொண்டது.
குடியிருப்புக்கு அருகில் கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. மாலை, இரவு நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது கருஞ்சிறுத்தையின் நடமாட்டத்தின் காரணமாக நாங்கள் பீதியுடன் வசித்து வருகிறோம். ஆனால் வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து அந்த கருஞ்சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story