தேனி-பெரியகுளம் சாலையில் மரங்கள் வெட்டிய நெடுஞ்சாலைத்துறையினரை தடுத்து நிறுத்திய மக்கள்
தேனி-பெரியகுளம் சாலையில் நின்ற பழமையான மரங்களை வெட்டிய நெடுஞ்சாலைத்துறையினரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி முதல் லோயம்கேம்ப் வரையும், ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரையும் சாலையின் இருபுறமும் பிரமாண்ட மரங்கள் நின்றன. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன.
தேனி நகரை எடுத்துக் கொண்டால் மதுரை, பெரியகுளம் சாலைகளில் நின்ற பழமையான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. தற்போது மதுரை சாலையில் சில மரங்கள் தப்பிப் பிழைத்து நிற்கின்றன. இதில் தேனி- பெரியகுளம் சாலையில் போலீஸ் நிலையம் அருகில் நின்ற சில மரங்களை வெட்டும் பணி நேற்று காலையில் நடந்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் மரங்களை வெட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், மரக்கிளைகளை தான் வெட்டுகிறோம் என்று கூறி ஒரு மரத்தின் பெரும் பகுதியை வெட்டிவிட்டு, அருகில் நின்ற மற்றொரு புளிய மரத்தையும் வெட்டும் பணியில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து தென்இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி அங்கு வந்து மரங்களை வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினார். அவருடன் சேர்ந்து பொதுமக்களும் இந்த பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு நின்ற மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ‘விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் சாலையோரம் உள்ள மரக்கிளைகளை வெட்டுகிறோம்’ என்று தெரிவித்தனர்.
நெடுஞ்சாலையில் பல இடங்களில் பட்டுப்போன நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதனை அகற்றாமல், பசுமையான மரங்களை வெட்டுவதை ஏற்க முடியாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுவரை தேனி மாவட்டத்தில் சாலையோரம் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடவு செய்யப்படாமல் உள்ளதால், தேனி நகரில் புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்றும், நகருக்குள் கனரக வாகனங்கள் வராமல் தடுக்க சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட, திட்டச்சாலைகளை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து மரங்களை வெட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் கைவிட்டனர். புதிய மரக்கன்றுகள் நடவு செய்த பிறகு முறைப்படி மக்கள் ஒத்துழைப்புடன் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறிச் சென்றனர்.

Related Tags :
Next Story