மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் நடைபெறும் வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது
‘‘மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் நடைபெறும் வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது’’ என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
‘‘மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் நடைபெறும் வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது’’ என்று சித்தராமையா கூறினார்.
அரசியல் உள்நோக்கம் கொண்டதுமின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று 3–வது நாளாக வருமான வரி சோதனை நீடித்தது. வருமான வரி சோதனை தொடங்கிய நாளில் இருந்து வெளியே வராமல் சித்தராமையா வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்த முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
‘‘வருமான வரித்துறை அதிகாரிகள் யாருடைய வீடுகளிலும் சோதனை நடத்தலாம். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இதன் நோக்கம் சரியாக இருக்க வேண்டும். டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் சோதனை நடத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் உண்மையான நோக்கம் சரியல்ல.
மத்திய போலீஸ் படையை...குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்க தேவை இல்லை. ஆயினும் அவர்கள் அங்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். குஜராத் எம்.எல்.ஏ.க்கள், டெல்லி மேல்–சபை தேர்தலில் கலந்துக்கொள்ளக்கூடாது என்றும், அதற்கு பணம் பெற்றுக்கொள்ளும்படியும் வருமான வரி அதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் வருமான வரி சோதனை என்பது வெறும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது மிக தெளிவாக தெரிகிறது. கர்நாடகத்தில் இதற்கு முன்பு வருமான வரி சோதனை நடத்தும்போது உள்ளூர் போலீசாரை பாதுகாப்புக்கு பயன்படுத்தி வந்தனர். இப்போது முதல் முறையாக மத்திய போலீஸ் படையை பாதுகாப்புக்கு அழைத்து வந்துள்ளனர்.
கூட்டாட்சி தத்துவத்தையே...இதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது. ஆயுதங்களுடன் மத்திய போலீஸ் படையை ஈகிள்டன் சொகுசு விடுதி, டி.கே.சிவக்குமாரின் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றது சரியல்ல. மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் இத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது. ஊழலை ஒழிக்கும் விதத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளதாக மத்திய மந்திரி அனந்தகுமார் கூறி இருக்கிறார். அவர் மீதே ஊழல் புகார்கள் உள்ளன. அதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மீது ஊழல் புகார்கள் இல்லையா? தங்கள் மீதே ஊழல் புகார்கள் இருக்கும்போது காங்கிரஸ் தலைவர்களை பற்றி பேச பா.ஜனதாவினருக்கு தகுதி இல்லை. வருமான வரி அதிகாரிகள் என்ன தகவல்களை கண்டுபிடித்து உள்ளனர் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் என்னுடைய கருத்துப்படி இந்த வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது.’’
இவ்வாறு சித்தராமையா கூறினார்.