மேல்மருவத்தூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலரை சிறைபிடித்த கிராம மக்கள்
மேல்மருவத்தூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
மதுராந்தகம்,
மேல்மருவத்தூர் அருகே உள்ள தண்டலம் ஊராட்சியில் சுமார் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சீரான குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி நேற்று தண்டலத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன் அங்கு சென்றார். அப்போது அவரை கிராம மக்கள் சிறை பிடித்தனர். அவர்களிடம் பத்மநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள், குடிநீர் வசதி, தெருக்களில் மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனவும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்பட பல்வேறு அரசு திட்டங்களில் பொதுமக்கள் சேர்வதற்கு பணம் கேட்கும் பஞ்சாயத்து ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக பத்மநாதன் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் உத்திரமேரூர்-மதுராந்தகம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story