‘அரசியல் ஆதாயத்துக்காகவே தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்’ திருமாவளவன் குற்றச்சாட்டு
‘அரசியல் ஆதாயத்துக்காகவே தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டு உள்ளார்’ என்று, செய்யாறில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புளியரம்பாக்கம் கிராமத்தில் கடந்த 23-ந் தேதி நடந்த கலவரத்தில் எலக்ட்ரீசியன் வெங்கடேசன் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். அந்த பகுதியில் வீடுகள் சூறையாடப்பட்டு, வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் 10 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று புளியரம்பாக்கத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனை தொடர்ந்து செய்யாறு ஆரணி கூட்ரோடு பகுதியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
புளியரம்பாக்கம் கிராமத்தில் அப்பாவி இளைஞரான வெங்கடேசனை கடத்தி கொண்டு போய் கொலை செய்துள்ளனர். அவரது தம்பி ஆதிகேசவன் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட புளியரம்பாக்கத்தில் போலீஸ் பாதுகாப்பில்லை. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் இருக்கும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக அரசு இப்படிப்பட்ட வெறியாட்டத்தினை வேடிக்கை பார்க்கும் அரசாகவே செயல்பட்டு வருகிறது. கடந்த 6 மாதத்தில் தமிழகத்தில் நடத்த 40 படுகொலையில் 30 பேர் தலித் மக்கள். குறுக்கு வழியில் செல்லவும், சமூக விரோத, சட்டவிரோத செயல்களில் ஈடுபடவும் தலித் மக்களுக்கு தெரியாது. அவர்கள் உழைப்பால் உயரும் கூட்டமாக திகழ்கின்றவர்கள்.
தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத செயல்கள் அதிகாரிகள் துணையில்லாமல் எந்த ரவுடியும் எதையும் செய்ய முடியாது. ரவுடியை உருவாக்குவதே அரசு தான், அதிகாரிகள் தான். இந்த கொலை முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்திற்காக நடந்துள்ளது. தர்மபுரியிலும் இதேபோன்ற கொலை நடந்தது.
இந்த ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. 5 ஆண்டுகளும் இந்த ஆட்சி நீடிக்க வேண்டும். மத்திய அரசு இங்கு ஆதிக்கம் செலுத்தக்கூடாது என பேசியதும், சுட்டிக்காட்டியதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். கடந்த ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மனித நேயத்துடன் முதன் முதலில் அவரை பார்க்க சென்றவன் நான் தான்.
எனவே நான் இந்த ஆட்சிக்கு எதிரானவன் அல்ல. சாதி வெறியர்கள் மீது இந்த ஆட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டம் எத்தனை சதவிகிதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி சட்டம் சொல்லும் தொகையைக்கூட தமிழகத்தில் தர மறுக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் அல்ல. இந்தியா முழுவதும் தலித்துகளுக்கு எதிரான ஆட்சி நிர்வாகம் தான் இருக்கிறது. எந்த சாதிக்கும் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் நான் அல்ல. இந்த படுகொலையை கண்டிக்க வேண்டியது என் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story