திருக்காட்டுப்பள்ளி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமமக்கள் முற்றுகை போராட்டம்
திருக்காட்டுப்பள்ளி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். திடீரென அவர்கள் சமையல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி அருகே மாரநேரி கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. சாலையின் அருகில் கடை அமைந்துள்ளதால் பெண்கள், மாணவிகள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதனால் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த மே மாதம் 31-ந் தேதி கடை முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் விரைவில் இந்த கடை இடமாற்றம் செய்யப்படும் என உறுதி அளித்ததால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஆனால் அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் கடை இடமாற்றம் செய்யப்படவில்லை. இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெ.ஜீவக்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் காந்தி ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட கிராமமக்கள் மாரநேரி மந்தையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் கடையை சூறையாடி விடாத படி இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திடீரென டாஸ்மாக் கடையின் அருகே செங்கல்லை வைத்து அடுப்பு மூட்டி பெண்கள் சிலர் சமையல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். பின்னர் மாரநேரி-கடம்பங்குடி சாலையில் அமர்ந்து பெண்கள் உள்பட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பூதலூர் தாசில்தார் ரமேஷ், டாஸ்மாக் அதிகாரிகள் இசக்கிமுத்து, புண்ணியமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை மூடியே தீர வேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தினர். இந்த பேச்சுவார்த்தை 2½ மணிநேரம் நீடித்தது. முடியில் வருகிற 13-ந் தேதிக்குள் கடையை மூடிவிடுவதாக அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று சாலை மறியல் கைவிடப்பட்டது.

Related Tags :
Next Story