கோட்டூர் அருகே, வயல்வெளியில் 1 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுக்கும் கிராம பெண்கள்
கோட்டூர் அருகே வயல்வெளியில் 1 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று கிராம பெண்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர்.
கோட்டூர்,
கோட்டூர் ஒன்றியம் தெற்கு மண்ணுக்குமுண்டான் கிராமத்தில் 40 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு மாதா கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த குடிநீர் தொட்டிக்கு வந்த குடிநீரை நிறுத்தி விட்டனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் குடிநீர் எடுப்பதற்காக மண்ணுக்குமுண்டான் கிராம பெண்கள் 1 கி.மீ. தூரம் வயல்வெளியில் நடந்து சென்று ஏரிக்கரை கிராமத்தில் இருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பல்வேறு மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் கூறியதாவது:-
தெற்கு மண்ணுக்கு முண்டான் கிராமத்திற்கு 25 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது எங்கள் ஊருக்கு வந்த குடிநீரை வேறு பகுதிக்கு திருப்பி அனுப்புகிறார்கள். இதனால் ஒரு மாதமாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். குடிநீர் எடுக்க பக்கத்து கிராமத்திற்கு நடந்து சென்று எடுத்து வருகிறோம். காலையில் சென்றால் குடிநீர் கிடைக்காது. கடும் வெயிலில் சென்று எடுத்து வருகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தெற்கு மண்ணுக்குமுண்டான் கிராமத்தில் 6 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. நாங்கள் கலந்து ஆலோசித்து விரைவில் பெருகவாழ்ந்தான் கடைதெருவில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Tags :
Next Story