கொசு மருந்து அடிக்கும் பணி


கொசு மருந்து அடிக்கும் பணி
x
தினத்தந்தி 5 Aug 2017 3:45 AM IST (Updated: 5 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் நகரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

அரியலூர்,

 பிரசாரத்தில் டெங்கு காய்ச்சல் உருவாக காரணமான கொசுக்கள் எப்படி உருவாகிறது. அதனை எப்படி தடுப்பது என்று ஒவ்வொரு வீடுகளுக்கும் துப்புரவு பணியாளர்கள் சென்று செயல் விளக்கம் செய்து காட்டி வருகின்றனர். வீட்டில் உபயோகம் இல்லாத பாத்திரங்கள், பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை அகற்றினர்.

மேலும் தண்ணீர் தேங்கும் இடங்களை சுத்தம் செய்து கொசு மருந்து அடித்து வருகின்றனர். காலை, மாலை என இரு வேளைகளிலும் வீடுகளில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. மேலும் கொசு மருந்து வீட்டின் உள்ளே வருவதற்கு கதவு, ஜன்னல்களை திறந்து வைத்து பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நகராட்சி ஆணையர் வினோத் கேட்டு கொண்டுள்ளார்.

Next Story