நெடுவாசலில் வேப்பிலையை கையில் ஏந்தி பொதுமக்கள் கும்மியடித்து போராட்டம்


நெடுவாசலில் வேப்பிலையை கையில் ஏந்தி பொதுமக்கள் கும்மியடித்து போராட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2017 4:30 AM IST (Updated: 5 Aug 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்ை- ரத்து செய்ய வலியுறுத்தி வேப்பிலையை கையில் ஏந்தி பொதுமக்கள் கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 115-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.

அதில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் போட்டனர். இதைத்தொடர்ந்து, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி நாடியம்மனிடம் முறையிட்டனர். பின்னர், வேப்பிலையை கையில் ஏந்தியவாறு பொதுமக்கள் கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story