மேட்டூர் அணையிலிருந்து 2-வது முறையாக திறந்துவிடப்பட்ட தண்ணீர் மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது
மேட்டூர் அணையிலிருந்து 2-வது முறையாக திறந்துவிடப்பட்ட தண்ணீர் மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது.
கிருஷ்ணராயபுரம்,
தமிழகத்தில் பொய்த்து போன பருவமழையால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் இந்த ஆண்டு ஜூன் மாதம் சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தண்ணீர் இல்லாமல் கடந்த 6 மாத காலமாக காவிரி, பாசன வாய்க்கால் வறண்டுபோய்கிடக்கிறது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் அவ்வப்போது பெய்யும் பருவமழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சில அடி உயர்ந்ததால் காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் 15-ந் தேதி வினாடிக்கு ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் கடந்த மாதம் 21-ந் தேதி காலை நொய்யல் காவிரிக்கு வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதியிலிருந்து மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு ஆயிரத்து 200-ல் இருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்த தண்ணீர் மாயனூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் வரை வந்து நின்றுவிட்டது. இந்நிலையில் 2-வது முறையாக கடந்த 1-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஆடிப்பெருக்கு விழா முடிவடைந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று இரவு மாயனூர் கதவணைக்கு வந்தது.

Related Tags :
Next Story