வங்கியில் ரூ.280 கோடி கடன் வாங்கி மோசடி: தனியார் நிறுவன இயக்குனர் உள்பட 3 பேர் கைது


வங்கியில் ரூ.280 கோடி கடன் வாங்கி மோசடி: தனியார் நிறுவன இயக்குனர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2017 3:44 AM IST (Updated: 5 Aug 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் ரூ.280 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தனியார் நிறுவன இயக்குனர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

மும்பை,

வங்கியில் ரூ.280 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தனியார் நிறுவன இயக்குனர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

ரூ.280 கோடி மோசடி

ராஜ்புடன் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர் அஜய் குப்தா. இவர் கடந்த 2011–12–ம் ஆண்டில் பவாய், தாதர், தாராப்பூர் உள்ளிட்ட இடங்களில் சொத்து வாங்க உள்ளதாக கூறி, ஸ்டேட் வங்கியில் ரூ.280 கோடி வரை கடன் வாங்கினார்.

அதன் பின்னர் அவர் வாங்கிய கடனை வங்கியில் திரும்பி செலுத்தவில்லை. இது குறித்து மோசடி வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

3 பேர் கைது

விசாரணையில், அஜய் குப்தா வங்கியில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து கடன் வாங்கியது தெரியவந்தது. மேலும் இந்த மோசடிக்கு வங்கி அதிகாரி வி.என். கதம் மற்றும் ரூபி மில்ஸ் இயக்குனர் பரத் ஷா ஆகியோர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அஜய் குப்தா, வி.என்.கதம் மற்றும் பரத் ஷாவை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் 3 பேரும் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு 3 பேரையும் வருகிற 8–ந்தேதி வரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.


Next Story