ரிக் வண்டி மேலாளர் தூக்குப்போட்டு சாவு: நஷ்டஈடு கேட்டு உறவினர்கள் சாலைமறியல்
தூக்குப்போட்டு இறந்த ரிக் வண்டி மேலாளர் குடும்பத்துக்கு நஷ்டஈடு கேட்டு அவரது உறவினர்கள் சாலைமறியல் செய்தனர்.
எலச்சிபாளையம்,
எலச்சிபாளையம் ஒன்றியம் புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் விஜயமூர்த்தி(வயது24). இவர் ரிக்வண்டியில் மேலாளராக பணி செய்து வந்தார். இந்த ரிக்வண்டி ஆந்திரமாநிலம் குப்பம்பகுதியில் வேலை செய்து கொண்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி குப்பம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் விஜயமூர்த்தி தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.
இதுகுறித்து ஆந்திரபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் விஜயமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு புள்ளாக்கவுண்டம்பட்டிக்கு வந்தது.
இந்தநிலையில் விஜயமூர்த்தியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது குடும்பத்தாருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரியும் உறவினர்கள் புள்ளாக்கவுண்டம்பட்டி பஸ்நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் சாலைமறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ரிக் வண்டி உரிமையாளரிடமிருந்து விஜயமூர்த்தி குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக ரூ.2 லட்சம் வாங்கி கொடுக்கப்பட்டது. பின்னர் உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story