9 பேர் மட்டுமே வாழும் கிராமம்..!


9 பேர் மட்டுமே வாழும் கிராமம்..!
x
தினத்தந்தி 5 Aug 2017 12:00 PM IST (Updated: 5 Aug 2017 10:56 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் 9 பேர் என்பது ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த கணக்காக இருக்கும்.

ந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் 9 பேர் என்பது ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த கணக்காக இருக்கும். ஆனால் ஒரு நாட்டில் உள்ள பல கிராமங்களில் ஒட்டுமொத்த மக்கள் தொகையே ஒற்றை இலக்கங்களில் தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா..?

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தீவுகளில் ஒன்று தான் இந்த பாரோ தீவு. இந்த கடல் பகுதியில் மொத்தம் 18 தீவுகள் உள்ளன. இவை சுரங்கப்பாதைகள், பாலங்கள், படகுப் போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த தீவுகளை சுற்றி இருக்கும் பல கிராமங்களில் ஒற்றை இலக்க மக்கள் தொகையே இருக்கிறது.

இந்த தீவுகளின் நடுவில் அமைந்துள்ள குட்டி கிராமம் ஒன்றில் வெறும் 9 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள். இதற்கு அருகிலுள்ள ‘மைக்கினஸ்’ என்னும் கிராமத்தில் 10 பேர் மட்டும் வாழ்கிறார்கள். ஒரு சில கிராமங்களில் மட்டும் 12, 18, 22... என மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. அதுவே அதிகபட்ச மக்கள் தொகையாம். இந்த 18 தீவுகளும் எரிமலைத் தீவுகள் என்பதால், இந்த பகுதிகளில் மக்கள் குடியேற பயப்படுகிறார்கள். ஒரு தீவுக்கு 9 பேர் மட்டுமே இருந்தாலும் தனித்தனி வீடுகளில் வசிக்கிறார்கள்.

Next Story