தாயைக் காப்பாற்றிய 5 வயது மகன்!
வேல்ஸ் நாட்டில் மயங்கி விழுந்த தாயின் நிலை குறித்து அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து தாயைக் காப்பாற்றிய சிறுவனுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

வேல்சில் உள்ள பிரிட்ஜெண்ட் நகரைச் சேர்ந்த 34 வயதுப் பெண்மணி நிக்கோலா ஜென்கின்ஸ். அவரது 5 வயது மகன் கைரான் டப்.
ஒருநாள் காலை, மகனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப நிக்கோலா பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் மாடிப் படியிலிருந்து கீழே இறங்கியவர், மயங்கிக் கீழே விழுந்தார்.
அதைக் கண்ட சிறுவன் கைரான், தனது தாயைக் காப்பாற்ற சமயோசிதமாக செயல்பட்டான். அதாவது, அவன் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு போன் செய்தான்.
போனை எடுத்த அதிகாரியிடம், தனது தாய் மயங்கி விழுந்துள்ளது குறித்துக் கூறினான். போனில் பேசிய அதிகாரி, ‘உன் தாயால் உன்னிடம் பேச முடிகிறதா?’ என கேட்டிருக்கிறார்.
அதற்கு, ‘இல்லை’ என கைரான் கூறியுள்ளான். பிறகு, உன் அம்மாவின் மீது ஒரு போர்வையைப் போர்த்து என அதிகாரி சிறுவனிடம் கூற, தான் ஏற்கனவே அதைச் செய்துவிட்டதாக கைரான் தெரிவித்திருக்கிறான்.
பிறகு, நினைவில் வைத்திருந்த தனது வீட்டு முகவரியை சரியாக அவசர உதவி அதிகாரியிடம் கைரான் கூறியிருக்கிறான்.
அப்போது, கைரானின் வீடு உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. வீட்டின் சாவி அவனுக்கு எட்டாத உயரத்தில் இருந்திருக்கிறது.
ஆனால், கைரான் தனது தந்தையின் செருப்பை வைத்து எகிறிக் குதித்து புத்திசாலித்தனமாக சாவியை மேலிருந்து எடுத்து கதவை திறந்துள்ளான்.
சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மருத்துவக் குழுவினர், மயங்கிக் கிடந்த நிக்கோலாவுக்கு அவசர சிகிச்சை அளித்து அவர் உயிரைக் காப்பாற்றியிருக் கிறார்கள்.
சிறுவன் கைரானுக்கு, தைரியமாகச் செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் ‘லேவ்ரிக்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிக்கோலா கூறுகையில், எனக்கு வலிப்பு அறிகுறி இருப்பதால் ஏற்கனவே மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறேன்.
இதுபோல ஏதாவது எதிர்பாராத சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்கும் என முன்னரே தெரிந்துதான், கைரானுக்கு வீட்டு முகவரியையும், அவசர உதவியை அழைக்கும் விதத்தையும் சொல்லிக் கொடுத்திருந்தேன் என்றார்.
ஆனால், பதற்றப்படாமல் செயல்பட்ட சிறுவன் பாராட்டுக்குரியவன்தான்!

Related Tags :
Next Story