நெல்லையில் பீடித்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரிக்கை


நெல்லையில் பீடித்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2017 2:30 AM IST (Updated: 5 Aug 2017 11:02 PM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக் கோரி நெல்லையில் பீடித்தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை,

ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக் கோரி நெல்லையில் பீடித்தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

பீடித்தொழிலுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட பீடித்தொழிலாளர் சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அகில இந்திய பீடி, சுருட்டு புகையிலை தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் காசிவிசுவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் லட்சுமணன், மாவட்ட செயலாளர் பண்டாரம், பொருளாளர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி.யும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவருமான கே.சுப்பராயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து தாக்குதல்

அவர் நிருபர்களிடம் கூறும் போது, “பீடித்தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. ஏழை எளிய கல்வி அறிவு குறைந்த மக்களுக்கு வாழ்வாதாரம் என்று சொன்னால், அது பீடி சுற்றும் தொழில் தான். பீடித்தொழில் மீது மத்திய–மாநில அரசுகள் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

சேவை வரி என்ற பெயரில் பீடித்தொழிலுக்கு மத்திய அரசு 28 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் பல பீடிக்கம்பெனிகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், பீடி தொழிலுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும்“ என்றார்.

பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பேசினார்கள். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பீடித்தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story